Friday, May 02, 2014
ராமேஸ்வரம்::உலக மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் படகில் உலகை சுற்றி வருகிறார். அவர் தனுஷ் கோடிக்கு வந்தார்.ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சான்ட்ரா ரூப் சன் (41). உலக மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் ஜெர்மனியில் இருந்து இவர் தனியாக படகு பயணம் துவக்கினார். 10 அடி நீளமுள்ள பைபர் கிளாஸ் படகை பயன்படுத்துகிறார். இதில் உட்புறம் அமைந்துள்ள 2 பெடல்களை கால்களால் மிதித்து சைக்கிள் ஓட்டுவது போன்றும், துடுப்பின் உதவியுடனும் எந்த இயந்திர உதவியும் இல்லாமல் பல்வேறு நாடுகளை கடந்து அரபிக் கடல் பகுதிக்கு வந்தார்.
பின்னர், மும்பை, கோவா, கொச்சின் சென்று கடந்த 14.3.2013ல் மன்னார் வளைகுடா கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வந்தடைந்தார். மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு பாக் ஜலசந்தி கடல் வழியாக வேதாரண்யம் அடைந்தார்.பின்னர், இலங்கை சென்ற அவர் நேற்று காலை மன்னார் துறைமுகத்தில் இருந்து தனது படகில் புறப்பட்டு மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி கடற்கரையை வந்தடைந்தார்.
இவரை ரெட்புல் சாதனையாளர்கள் நிறுவனத்தின் நிர்வாகிகள் வரவேற்றனர். மண்டபத்தில் தங்கும் இவர், சில நாள் கழித்து படகில் மற்ற நாடுகளுக்கும் பயணித்து 2016 செப்டம்பரில் ஆஸ்திரேலியா திரும்புகிறார். கடலில் சிறிய படகில் தனியாக இதுவரை 8 ஆயிரம் கிமீ தூரத்தை கடந்து வந்துள்ளதாக கூறிய சான் ட்ரா ரூப்சன், சிறிய படகாக இருப்பதால் சிறிய அளவில் உணவு பொருட் களை கொண்டு செல்வதாக கூறுகிறார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் படகு பயணம் அமைந்துள்ளதாக சான்ட்ரா கூறினார்.

No comments:
Post a Comment