Saturday, May 3, 2014

சென்னை குண்டுவெடிப்பு வழக்கில் துப்பு கிடைத்தது : சிபிசிஐடி தகவல்!

Saturday, May 03, 2014
சென்னை::சென்னை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு கிடைத்திருப்பதாக சிபிசிஐடி ஐ.ஜி மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சிபிசிஐடி ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் நேற்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது சென்டிரல் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில், சந்தேகப்படும்படியான நபர் பதிவாகியிருக்கும் வீடியோவை வெளியிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூரில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் துப்பு கிடைத்துள்ளது. 5.40க்கு வரவேண்டிய ரயில் ஒரு மணிநேரம் தாமதமாக சென்னைக்கு வந்தது. சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ஆந்திர எல்லையில் அந்த குண்டு வெடித்திருக்கும்.

ரயிலில் இருந்து இறங்கியதும் ஒரு நபர் வேகமாக ஓடினார். அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர்தான் குற்றவாளி என்று கூற முடியாது. அந்த நபர் விசாரணைக்கு ஆஜரானால் நல்லது.

உடைந்து கிடந்த கடிகார பகுதியை வைத்து பார்க்கும்போது இந்த குண்டு வெடிப்புக்கு டைமர் பாம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment