Saturday, May 3, 2014

குண்டு வெடிப்பு எதிரொலி : பாம்பன் பாலத்தில் பலத்த பாதுகாப்பு!

Saturday, May 03, 2014
ராமேஸ்வரம்::சென்னை குண்டு வெடிப்பில் எதொரொலியாக ராமேஸ்வரம் கோவில் மற்றும் பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை, சென்டிரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.  ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை ரயில்வே போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி மதுரை உள்பட வெளியூர்களில் இருந்து வந்த அனைத்து ரயில்களிலும் ராமேசுவரம் வந்த சுற்றுலா பணிகளை போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். இதுதவிர முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதேபோல ராமேசுவரம் கோவிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கு வாசல்கள், ரத வீதிகளில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலமும் போலீசார் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பாம்பன் ரோடு பாலம் மற்றும் ரயில் பாலத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment