Thursday, May 1, 2014

புலிகளை தோற்கடித்து போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், உலகில் உள்ள பாதுகாப்பான நாடாக இலங்கை மாறியுள்ளது: சரத் அமுனுகம!

Thursday, 1 ,May, 2014
புலிகளை தோற்கடித்து போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், உலகில் உள்ள பாதுகாப்பான நாடாக இலங்கை மாறியுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம  கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வன்வேள்ட் எயார்லைன்ஸூடன் இணையும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சரத் அமுனுகம இதனை கூறியுள்ளார்.

உண்மையான சமாதானத்தை நாடு தற்பொழுது அனுபவித்து வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதானத்தின் பலனாக மத்தள விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டதுடன், பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் அம்பாந்தோட்டைக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் எனவும், அங்கு வந்து சுற்றுலா மற்றும் முதலீடு துறைகளில் இருக்கும் வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போருக்கு பின்னரும் இலங்கை இன்னும் பாதுகாப்பான நாடாக மாறவில்லை என சில நாடுகள் தமது பயண ஆலோசனைகளை தொடர்ந்து வருகின்றன எனவும் அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment