Thursday, May 1, 2014

நடுவானில் தீப்பிடித்த ஆஸ்திரேலிய விமானம். 93 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டு!!

Thursday, 1 ,May, 2014
ஆஸ்திரேலியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்டதொழில்நுட்ப காரணம் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் விமான பயணிகள் பெரும் பதட்டம் அடைந்தனர். ஆனால் விமானி மிகவும் சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கி அதில் பயணம் செய்த 93 பயணிகளை காப்பாற்றினார். அந்த விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
 
ஆஸ்திரேலியாவின் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஜெட் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று  காலை 10.45 ம 
ணிக்கு 93 பயணிகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
 
இந்த விமானம் விண்ணில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானத்தின் எஞ்சின் பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் எரிபொருள் உள்ள பகுதியில் தீப்பிடித்து பின்னர் அந்த தீ எஞ்சினில் பரவியதாக விசாரனையில் தெரிய வந்துள்ளது.. எனினும், விமானி கொன்சமும் பதட்டப்படாமல் சாதுர்யமாக விமானத்தை மிக லாவகமாக தரையிறக்கி, விமானத்தில் பயணம் செய்த 90 பயணிகளின் உயிரை காப்பாற்ரினார்.
 
விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் தீயணைப்புத்துறை வீரர்கள் விமானத்தில் தீப்பற்றிய பகுதியை அணைத்தனர்.

No comments:

Post a Comment