Thursday, 1 ,May, 2014
வாஷிங்டன்::உக்ரைன் மீது படையெடுக்க மாட்டோம் என்று ரஷ்யா
உறுதியளித்துள்ளதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன்
தெரிவித்துள்ளது.
இது குறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: அமெரிக்க
பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் தொலைபேசி மூலம் ரஷ்ய பாதுகாப்பு
அமைச்சர் செர்ஜி ஷோய்குவிடம் பேசினார். அப்போது உக்ரைன் பிரச்னைக்கு
தீர்வுக் காண அந்நாட்டு அரசுடன் இணைந்து ராஜீயரீதியான நடவடிக்கையை
மேற்கொள்வது அவசியம். உக்ரைன் பகுதிக்குள் நிகழும் ஊடுருவலை ரஷ்யா தனது
செல்வாக்கை பயன்படுத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும். உக்ரைனில் தொடர்ந்து
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் ரஷ்யா மேலும்
தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படும்.
ராஜீயரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரஷ்யா கடும் நெருக்கடியை
சந்திக்க நேரிடும். உக்ரைனின் எல்லையில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட
அந்நாட்டு அரசுக்கு முழு உரிமை உள்ளது. அதன்படியே உக்ரைனின் கிழக்குப்
பகுதியில் ராணுவ நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில்
கிளர்ச்சியாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 7 ஐரோப்பிய பாதுகாப்பு
மற்றும் ஒத்துழைப்பு பார்வையாளர்களை விடுவிக்க ரஷ்யா உதவ வேண்டும், என
ஷோய்குவிடம் சக் ஹேகல் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து எந்த சூழ்நிலையிலும் ரஷ்யா படைகள் உக்ரைனில் போர்
தொடுக்காது. அங்கு நிலவும் இக்கட்டான பிரச்னைக்கு தீர்வு காண் வேண்டிய
பொறுப்பை ரஷ்யா முன்னேடுத்து செல்ல விரும்புகிறது, என்று ஹேகலிடம் ஷேய்கு
உறுதியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment