Friday, May 02, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதியற்றவர்களுக்கு அதனைப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன இதன் கீழ் கடந்த ஐந்து வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதியற்றவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களில் காணி உறுதிகள் அற்ற 105 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் இந்த காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்த காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் வி.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மண்முனைபற்று பிரதேச செயலாளர் வாசுதேவன்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சுகுணன்,மாவட்ட காணி உத்தியோகத்தர் திருமதி குவேதா,தொழிலதிபர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 1994ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்டு இதுவரையில் காணி உறுதிகள் வழங்கப்படாத 105 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதேபோன்று காணி உறுதிப்பத்திரம் அற்ற அனைவருக்கு; காணி உறுதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்

No comments:
Post a Comment