Wednesday, May 28, 2014
இலங்கை::இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் மற்றும் உகண்டா வெளிவிவகார அமைச்சர் ஆகிய இருவரும் தனித்தனியே யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்திக்கின்றனர்.
இலங்கை::இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் மற்றும் உகண்டா வெளிவிவகார அமைச்சர் ஆகிய இருவரும் தனித்தனியே யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்திக்கின்றனர்.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடி இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். அவர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடுவார். பின்னர் ஆஸ்திரேலிய அரசின் உதவியுடன் வடக்கில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களையும் மூடி நேரில் பார்வையிடவுள்ளார்.
இதேவேளை இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு வந்த உகண்டா வெளிவிவகார அமைச்சர் ஷாம் குதேசா, நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்தார். இதன் பின்னர் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்கும் குதேசா, யாழ்.நூலகம்,கோட்டை ஆகிய இடங்களையும் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment