Wednesday, May 28, 2014

நைஜீரியாவில் பயங்கரம் தீவிரவாதிகள் தாக்குதலில் 31 போலீசார் பரிதாப சாவு!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Wednesday, May 28, 2014
தமாதுரு: நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.நைஜீரியாவின் வடக்கு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே முஸ்லீம் மதத்தின் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வட பகுதியில் நடைபெற்று வரும் கலவரங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
 
மேலும் கடந்த சில நாட்களாக பேருந்துகளுக்கு குண்டு வைப்பு, மாணவிகள் கடத்தல், போலீசார் மீது துப்பாக்கி சூடு என போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.ஏப்ரல் 14ம் தேதியன்று, தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200க்கும் அதிகமான மாணவிகள் இன்னும் அவர்கள் வசம் பிணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க சர்வதேச நாடுகளின் உதவியுடன் நைஜீரிய ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி நான்ஷாக் செக்வாம் கூறுகையில், ‘
 
எண்ணை வளம் மிக்க பகுதியான யோப் மாகாணத்தில் புனி யாதி என்ற இடத்தில் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஆறு வாகனங்களில் வானில் துப்பாக்கியால் சுட்டபடி நகரத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கு கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 17 பாதுகாப்பு படைவீரர்களும், 14 போலீசாரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்’ என்று தெரிவித்தார்.இதே பகுதியில் தான் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி ஒன்றில் நுழைந்து 59 மாணவர்களை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment