ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி யாழ்ப்பாணம் கோர்ட்டில் இந்திய தூதரக அதிகாரிகள் இன்று 2வது முறையாக மனு தாக்கல் செய்கிறார்கள். இலங்கை சிறையில் உள்ள ராமநாதபுரம் மீனவர்கள் எமர்சன், லாங்லெட், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், ஜெயச்சந்திரன், பபாலமுருகன், பத்மநாதன், சத்யமுருகன், சூசை, அலங்காரம் உள்ளிட்ட 11 பேரை இலங்கை அரசு விடுவிக்க உத்தரவிட்டது. இவர்கள் அனைவரும் முறைப்படி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகம் திரும்புவர் என எதிபார்கப்படுகிறது.
இந்நிலையில் யாழ்பாணம் சிறையில் இருக்கும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சரவணன், மனோகரன், செந்தில்குமார் ஆகியோருக்கு யாழ்பாணம் கோர்ட் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து விடுதலை செய்து 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய கோரி, இந்திய தூதரக அதிகாரிகள் நேற்று முன்தினம் யாழ்பாணம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனை கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால் இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக மீனவர்கள் 3 பேருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை ரத்து செய்ய வலியுறுத்தி இரண்டாவது முறையாக இன்றும் அதே யாழ்ப்பாணம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்கின்றனர். இன்று மாலைக்குள் 3 மீனவர்களும் விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment