Thursday, May 29, 2014
இலங்கை:கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற மாநகர சபையின் மாதாந்த அமர்வில் தலைமை வகித்த முதல்வர் நிஸாம் காரியப்பர் வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிட்டதாவது;
'சிராஸ் மீராசாஹிப் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக எமது கட்சியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி இருந்த போதிலும் அதன் மூலம் அவரது உறுப்பினர் பதவியை வெற்றிடமாக அறிவிப்பதற்கு சட்டம் இடமளிக்கவில்லை.
உண்மையில் ஓர் உறுப்பினர் ராஜினாமா செய்வதாக இருந்தால்இ அவர் தனது ராஜினாமாக் கடிதத்தை மாநகர முதல்வரிடமே கையளிக்க வேண்டும்.அதனை பொறுப்பேற்கும் முதல்வர் உரிய நடவடிக்கைக்காக மாநகர ஆணையாளரிடம் கையளிப்பார்.
அவர் அதனை ஏற்றுக் கொண்டு தமது மாநகர சபையில் உறுப்பினர் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டிருப்பதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பார். அதன் பின்னரே உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும் புதிய ஒருவரை உறுப்பினராக நியமிக்குமாறும் உதவித் தேர்தல் ஆணையாளர் கட்சியின் செயலாளரைக் கோருவார்.
ஆனால் சிராஸ் மீராசாஹிபின் ராஜினாமா விடயத்தில் இந்த சட்டப்படியான முறை பின்பற்றப்படவில்லை என்பதால் அவர் தொடர்ந்தும் இந்த சபையில் ஓர் உறுப்பினராகவே கருதப்பட்டு வந்தார். கூட்ட அழைப்பிதழ்களும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்றைய சபை அமர்வுக்கு அவர் சமூகமளிக்காததன் மூலம் தொடர்ந்து 3 அமர்வுகளுக்கு அறிவித்தல் எதுவுமின்றி சமூகமளிக்காததன் காரணமாக இன்றுடன் இந்த சபையில் அவரது உறுப்புரிமை இழக்கப்படுகிறது என்பதை அறியத் தருகின்றேன்.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு எமது சபையின் செயலாளரைப் பணிக்கின்றேன்' என்று முதல்வர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment