Thursday, May 29, 2014

உலக இளைஞர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட 'கொழும்பு பிரகடனத்தை' ஐக்கிய நாடுகளின் சபைக்கு எதிர்வரும் வாரம் கையளிக்க நடவடிக்கை!

Thursday, May 29, 2014
இலங்கை:உலக இளைஞர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட 'கொழும்பு பிரகடனத்தை' ஐக்கிய நாடுகளின் சபைக்கு எதிர்வரும் வாரம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.

தேசிய இளைஞர் சேவை சபையின் தலைவர் லலித் பியூம் பெரேரா இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பும் 'கொழும்பு பிரகடனத்தை' உத்தியோக பூர்வமான கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

15வது உலக இளைஞர் மாநாடு இலங்கையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 

 

No comments:

Post a Comment