Wednesday, May 28, 2014
இலங்கை::இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். புதுடெல்லியில் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு தலைவர்களும் இரு நாடுகளின் பரஸ்பர உறவு குறித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனிவிரத்ன மற்றும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment