Wednesday, May 28, 2014
ஒடிஸா, ஆந்திரா மற்றும் வேறு மாநில சிறைகளில் இருக்கும் 85 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்து உரையாடியிருந்தார். இதன்போது இந்தியச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு கேட்டிருந்தார்.
இதையடுத்தே இலங்கை மீனவர்கள் விடுவிக்கபடவுள்ளனர் என 'ரைம்ஸ் ஒவ் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னர் இலங்கை சிறைகளில் இருந்த அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment