Saturday, May 3, 2014

புலிகள் அமைப்பையும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய அமைப்புக்களையும் புலனாய்வு செய்ய எந்த அதிகாரிகளும் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படவில்லை: பாதுகாப்பு அமைச்சு!

Saturday, May 03, 2014
இலங்கை::புலம்பெயர் நாடுகளில் உள்ள மற்றும் இலங்கையால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகளை, கண்காணிக்க 18 புலனாய்வு அதிகாரிகளை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயளாலர் வெளிநாட்டுகளுக்கு அனுப்பியுள்ளதாக சிங்கள டெய்லி என்ற பத்திரிகை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. இப்பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு கருத்து வெளியிடுகையில்:-
 
அது போன்ற ஒரு செயற்பாடு அமைச்சினால் மேற் கொள்ளப் படவில்லை என்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் குறித்த நாடுகளில் உள்ள அதிகாரிகளுக்கு சர்வதேச ரீதியான ஒரு செயற்பாட்டுக்கு பயிற்சி வழங்கும் முகமாகவே சென்றுள்ளனர் என்ற கருத்தையும் முற்றாக மறுக்கின்றது.
 
இலங்கை அரசு அன்மையில் புலிகள் அமைப்பையும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய அமைப்புக்களையும் மக்கள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 40 மற்றும் ஐ.நாவின் பாதுகாப்பு கழகத்தின் பயங்கரவாத தடுப்பு தீர்மானத்திறகமையவும் பட்டியலிட்டு தடை செய்துள்ளது.
 
பாதுகாப்பு அமைச்சினால் வெளி நாடுகளுக்கு அனுப்பபட்டிருக்கும் அதிகாரிகள் அரச கடமைகளுக்காக சென்றுள்ளதுடன், அன்மையில் பட்டியலிடப்பட்ட அமைப்புக்களினாலும் நபர்களினாலும் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பில் குறித்த நாடுகளுக்கு வெளிவிவகார அமைச்சு அறிவூட்டியுள்ளதுடன் இலங்கையில் பணி புரியும் குறித்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இக்குழுக்கள் மற்றும் நபர்கள் தெடர்பில் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைளையும் விளக்கியுள்ளது.
 
 புலிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட வெளி நாடுகளில் செயற்பட்டு வரும் அமைப்புக்களினால் உத்தியோக பூர்வ ஊடகங்களில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு அமையவே ஐ.நாவின் 1373ம் பாதுகாப்பு கழக தீர்மானத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

No comments:

Post a Comment