Saturday, May 3, 2014

தீவிரவாதிகளின் உருவத்தை கம்ப்யூட்டரில் வரைந்த போலீசார்!

Saturday, May 03, 2014
சென்னை::சென்னை சென்ட்ரலில் நின்ற கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்த தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளது.
தீவிரவாதிகள் குண்டு வைக்க வந்தபோது அவர்களை எஸ்_4, எஸ்_5 பெட்டிகளில் இருந்த பயணிகளில் பலர் பார்த்துள்ளனர்.
இரண்டு கைப்பைகளில் வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் எடுத்து வந்துள்ளனர். எந்தவித பதற்றமும் இல்லாமல் பயணிகள் போல அவர்கள் நடந்து கொண்டதால் அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
குண்டுகள் வெடித்த பிறகே பயணிகளில் சிலருக்கு தாங்கள் பார்த்த நபர்களில் சிலர் மீது சநதேகம் எழுந்துள்ளது. அந்த மர்ம நபர்கள் எப்படி இருப்பார்கள் என்ற விவரத்தை அந்த பயணிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் குண்டு வைத்த தீவிரவாதிகள் உருவம் வரையப்பட்டுள்ளது. இதுபற்றி போலீஸ் டி.ஜி.பி. அனுனூப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:_
இந்த குண்டு வெடிப்பு வழக்கு துப்பு துலங்காதது அல்ல. சில வழிகளில் இதில் துப்பு துலங்கி விட்டது. எனவே தமிழக போலீசாரே தாமாகவே இந்த வழக்கு விசாரணையை தன்னிச்சையாக நடத்தி முடிக்க முடியும்.
குண்டு வைத்த தீவிர வாதிகளை சில பயணிகள் நன்றாக பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் தீவிரவாதிகள் முகம் வரையப்பட்டுள்ளது.
அந்த கம்ப்யூட்டர் படத்தை வைத்து தீவிரவாதிகளை தேடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அந்த கம்ப்யூட்டர் படத்தை தமிழகம் முழுவதும் அனுப்பியுள்ளோம். இதன் முலம் எங்களது விசாரணை விரைவில் அடுத்தக் கட்டத்துக்கு நகரும் என்று எதிர் பார்க்கிறோம்.
இவ்வாறு டி.ஜி.பி. அனுனூப் ஜெய்ஸ்வால் கூறினார்.

No comments:

Post a Comment