Saturday, May 3, 2014

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்லமுற்பட்ட 54 கைது!

Saturday, May 03, 2014
இலங்கை::முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து சட்டவிரோதமாக  அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். 
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்பட்டு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கைதானவர்களில் 11 பெண்களும் 13 குழந்தைகளும் 30 ஆண்களும் அடங்குகின்றனர் எனக் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலத்தின் பின்  இவ்வாறு அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.

No comments:

Post a Comment