Saturday, May 31, 2014
இலங்கை::வடமாகாணத்தில் 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 264 பில். ரூபா செல விலான அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
2013ஆம் ஆண்டில் மாத்திரம் வடமாகாணத்தில் 49.4 பில்லியன் ரூபா செலவிலான உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களின் நலன்புரித் திட்டங்களுக்காக அரசாங்கம் 23,933 மில்லியன் ரூபாவைச் செலவிட்டிருப்பதுடன், உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளுக்காக 221,444 மில்லியன் ரூபாவையும், சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக 20,410 மில்லியன் ரூபாவையும், கல்வித்துறை வளர்ச்சிக்காக 19,561 மில்லியன் ரூபாவையும் அரசாங்கம் செலவிட்டிருப்பதாக நிதியமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
வடமாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25.9 வீதமாக அதிகரித்துள்ளது. 2011ஆம் ஆண்டில் 16.2 வீதமாகக் காணப்பட்ட வளர்ச்சிவீதம் 2013ஆம் ஆண்டு 25.9 வீதமாக அதிகரித்துள்ளது. வடமாகாணமானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் 4 வீத பங்களிப்பைச் செலுத்தியிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்தது.
அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் வேலையின்மை வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. வடமாகாணத்தில் 6.1 வீதமாகக் காணப்பட்ட வேலையற்றோர் வீதம் 5.2 வீதமாகவும், கிழக்கு மாகாணத்தில் இந்த எண்ணிக்கை 15.5 வீதத்திலிருந்து 4.3 வீதமாகவும் குறைவடைந்திருப்பதாக நிதியமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
No comments:
Post a Comment