Saturday, May 31, 2014
இலங்கை::தமிழரசுக்கட்சியின உறுப்பினர்களுககு
இடையிலான முரண்பாட்டின் காரணமாக அதன் உறுப்பினர்கள் பலரும் தலைமைக்கு
எதிராக நீதிமன்றினை நாடிச்செல்ல தொடங்கியுள்ளனர். அவ்வகையில் மானிப்பாய்
பிரதேச சபையின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்; கே.கௌரிகாந்தனும்
நீதிமன்ற படியேற தயாராகியுள்ளார். அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக
கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா தற்போது கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே அவர் வகித்து வந்த தமிழரசுக்கட்சியின் மானிப்பாய் கிளை தலைவர்
பதவியிலிருந்து நீக்கபட்டிருந்த நிலையினில் தற்போது அவர் முற்றாக
கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தமை, பிரதேச சபைத் தவிசாளர் பதவி விலகக் காரணமாக இருந்தமை உள்ளிட்ட விடயங்களைக் காரணம் காட்டி இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவது தொடர்பாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒழுக்காற்று நடவடிக்கைகளிற்கு பொறுப்பான சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கட்சியின் வலி.கிழக்கு பிரதேசசபை தலைவர் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ஆகியோர் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது மாநாட்டை எதிர்வரும் ஓகஸ்ட் 22, 23, 24 ஆம் திகதிகளில் வவுனியாவில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்திருக்கின்றது. கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா முன்னிலையில் நேற்று நடைபெற்றபோது இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment