Friday, May 02, 2014
சென்னை::குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 14 பயணிகளுக்கு அரசு பொது மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ரெயில் குண்டு வெடிப்பில் காயம் அடைந்த பயணிகள் ஆம்புலன்சில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். ஒரு பெண் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு 201_வது வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள், நர்சுகள் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அனைவரும் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
காயம் அடைந்த 14 பயணிகள் பெயர் விவரம் வருமாறு:-
சுமல்(37),சன்புல்லா(27),ஆஞ்சநேயா(29),ஷெரின்வர்மன்(28),முரளி(27),பிஜின் குமார்(24),விமல் குமார்(35),ஷாஜன் குமார்(23),ஹரி(21),உமா(30),ஷோடன்(35),அல்பாக்கான்(17)
விஷன்ரா(15),ஷாடன் தேவ்நாத்(44) காயம் அடைந்த அனைவரும் ஆந்திரா, அசாம், மணிப்பூர் உள்பட வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
உறவினர்கள் யாரும் உடன் இல்லாததால் அவர்களது ஊர் பெயர் விவரம் தெரியவில்லை. அனைவரும் முன்பதிவு செய்து பயணம் செய்து வந்தனர்.
தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்கு வந்து காயம் அடைந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் மருத்துவ குழுவினருக்கு உத்தரவிட்டார்.
ஆஸ்பத்திரி வளாகத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
பலியான பெண் சுவாதியின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிகிச்சை பெறுபவர்கள் நலமாக உள்ளனர்: சென்னை கலெக்டர்!
குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களை சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, சுகாதார செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், பழ.கருப்பையா எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். தேவையான மருத்துவ வசதிகளை விரைந்து செய்யும் படி டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டனர். சம்பவம் குறித்து கலெக்டர் சுந்தரவல்லி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ குழுவினர் அவர்களை கண்காணித்து வருகிறார்கள். காயம் அடைந்தவர்களில் ஒருவருக்கு மட்டும் கழுத்தில் பலத்த காயம் உள்ளது. மற்றவர்களுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர் மற்றவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

.jpg)
.jpg)
No comments:
Post a Comment