Friday, May 02, 2014
இலங்கை::சென்னை மத்திய ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இரட்டைக் குண்டுத்
தாக்குதலை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.
அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்து
மோசமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்திய மக்களுடன் நாமும்
சோகத்தைப் பகிர்ந்துகொள்வதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்
குறிப்பிடப் பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பங்களுக்கும்,
இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் எமது அனுதாபங்களைத்
தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment