Friday, May, 02, 2014
சென்னை::எஸ்-4 பெட்டிக்குள் ஒரு இளம்பெண் குண்டு வெடிப்பில்
சிக்கி பலியாகி இருப்பது தெரிந்தது. போ
லீசார் அவர் உடலை அகற்றி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான அந்த பெண்ணின் சுவாதி என்றும் 22
வயதானவர் என்றும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய
வந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானசுவாதியின் உடலை ராஜீகாந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செயல்லப்பட்டது.
நேற்று மாலை பெற்றோர் மற்றும் உறவினருடன் சுவாதியின் உடலை
பெற்றுக்கொண்டனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுவாதியின் உடலைப்பார்த்து
கதறி அழுதனர். இந்த காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும்
தனது சொந்த ஊரான குண்டூர் மாவட்டத்தில் சுவாதி வாழும் பகுதி சோகத்துடன்
காணப்பட்டது. அப்பகுதியில் உள்ளவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் உயிரிழந்த பெண் உடலுக்கு அஞ்சலி!
ரெயில் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் முதல்_அமைச்சர்
ஜெயலலிதா உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பா.வளர்மதி, அப்துல் ரகீம் ஆகியோர்
ஆஸ்பத்திரிக்குப் போய் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்கள்.
அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தனர். தீவிர
சிகிச்சைக்கும் உத்தர விட்டார்.
பின்னர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த சுவாதியின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
.jpg)
No comments:
Post a Comment