Tuesday, May 27, 2014

ஆலையடிவேம்பில் 08 வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

Tuesday, May 27, 2014
இலங்கை::கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மேற் கொள்ளப் பட்ட 08 வீதிகள் ஞாயிற்றுக்கிழமை  மக்கள் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டது.
 
ஜப்பான் நாட்டின் ஜெய்கா திட்டதின் மூலம் இதற்காகப் பெறப்பட்ட ரூபா 09 கோடி நிதியின் மூலம் இப்புதிய கொங்ரீட் வீதிகள் மற்றும் வடிகான்களை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டுள்ளன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.நவரெடணராஜாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருததி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன மற்றும் பிரதேச சபையின் தவிசாளர் கே.ரட்ணவேல், பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

இதற்கமைய ஆர்.கே.எம். கல்லூரி வீதி, சுவாமி விபுலாணந்த சிறுவர் இல்ல வீதி, வீரமகாகாளி அம்மன் கோவில் வீதி, விளையாட்டு மைதான மேற்கு வீதி, கலாசார மண்டப வீதி, விளையாட்டு மைதான முன் வீதி என்பன திறந்து வைக்கப் பட்டன.

இதேவேளை நவரெட்ணராஜா கலையரங்கில் இறுதியாக இடம்பெற்ற நிகழ்வில்  வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 40 குடும்பங்களுக்கான கூரைத் தகடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment