Tuesday, May 27, 2014

வட மாகாணத்தில் மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கடலுணவு பதனிடும் தொழிற்சாலைகளை ஆளுநர் பார்வையிட்டார்!

Tuesday, May 27, 2014
இலங்கை::வட மாகாணத்தில் மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது.
 
வட மாகாண மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக கடற்தொழில் காணப்படுகின்றது. தற்போது கடலுணவுகளை இம்மாகாண மக்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யக்கூடியதாகவுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் வழிகாட்டலில் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களினால் வட மாகாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி யாழ் மாவட்டத்திலுள்ள கடலுணவு பதனிடும் தொழிற்சாலைகளுக்கு 22 மே 2014 அன்று விஜயம் செய்தார். இதன்போது குருநகரில் உள்ள நண்டு பதனிடும் தொழிற்சாலை, வட கடல் மீன்பிடி வலை தொழிற்சாலை, அன்னை கடலுணவு தொழிற்சாலை
 
என்பவற்றிற்கு விஜயம் செய்தார். அங்கு நடைபெறும் செயற்பாடுகளை அவதானித்ததுடன் கடமையாற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், தொழிற்துறை திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தார்கள்.

No comments:

Post a Comment