Tuesday, April 01, 2014
இலங்கை::இலங்கையில் இடம்பெற்றன எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. ஆணையாளர் விசாரணை நடத்த முடியும் என அங்கீகாரம் வழங்கியுள்ள ஐ.நா. கவுன்ஸிலின் தீர்மானத்தை தாம் நிராகரிப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச சட்டங்களை நன்கு ஆராய்ந்து மாற்றுத்திட்டமொன்றை உருவாக்குவது குறித்து தீவிர பரிசீலனை நடத்தப்படுவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசு மேற்கண்டவாறு தெரிவித்தது.
இலங்கைக்கு எதிரான பிரேரணை விடயத்தை இந்தியா மிகவும் தூரநோக்குடன் அணுகியுள்ளது என்றும் அதனால்தான் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அது பங்கேற்கவில்லை என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜெனிவா பிரேரணையை விடயத்தில் இந்தியா நடுநிலை வகித்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேலும் தெரிவித்ததாவது -
தமது நாட்டில் இடம்பெறும் உள்நாட்டுப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கைக்கு ஏற்பட்ட நிலைமை எதிர்காலத்தில் தமக்கும் ஏற்படலாம் என்ற தூரநோக்குடன் சிந்தித்தே இந்தியா இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதைப்போல இந்தியாவிலும் பல வருடங்களாக உள்நாட்டுப் பிரச்சினை இடம்பெற்று வருகிறது. இது நாம் சந்தித்த பிரச்சினைகளைவிட பெரும் பிரச்சினையாகும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment