Tuesday, April 29, 2014

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை சீரான முறையில் நிறைவேற் றுவதற்கு உதவ சட்டமா அதிபர் திணைக்களம் முன் வந்துள்ளது!

Tuesday, April 29, 2014
இலங்கை::கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை சீரான முறையில் நிறைவேற் றுவதற்கு உதவ சட்டமா அதிபர் திணைக்களம் முன் வந்துள்ளது. 9 மாகாணங்களிலும் இது தொடர்பாக மேற் கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வ தற்காக சட்டமா அதிபர் ஒவ்வொரு மாகாணத்திலும் தமது திணைக்களத்தின் கிளைகளை ஆரம்பிப்பதென்று தீர்மா னித்துள்ளார்.
 
இதனடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தின் கிளைகளுக்கு 9 மேலதிக சொலி சிட்டர் ஜெனரல்களை நியமிப்பதற்கும் சட்டமா அதிபர் தீர் மானம் எடுத்துள்ளார். இந்த 9 மேலதிக சட்டமா அதிபர் களுக்கு உதவுவதற்கு சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அரசாங்க சட்டத்தரணிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப் படுகிறது.
 
ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள சட்டமா அதிபர் திணைக் களத்தின் பிரிவுகள் அம்மாகாணங்களில் இடம்பெறும் குற்றவியல் விசாரணைகள் தொடர்பாகவும் எவ்விதம் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்வது என்பது தொடர்பாகவும் குற்ற வியல் நீதி அமைப்பு சம்பந்தமாகவும் பொலிஸாருக்குத் தேவை யான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கும்.
 
சட்டமா அதிபர் திணைக்கள பிரிவுகள் ஒவ்வொரு மாகாண ங்களிலும் உள்ள சகல குற்றவியல் மற்றும் சிவில் வழக்குக ளுக்கு பொறுப்பாக இருந்து பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் நீதி ஆலோசனைகளை வழங்கும். இவ்விதம் மாகாணங்களில் சட்டமா அதிபர் திணைக்கள பிரிவுகளை அமைப்பதன் மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மாகாணங்களின் நிர்வாக மற்றும் சட்ட விவகாரங்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த முடியுமென்று தீர்மானிக்கப்பட்டது.
 
இதன் மூலம் மாகாணங்களில் உள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் அப்பிரதேசங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி மாகாணங்களின் சட்ட நிர்வாகத்தை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு உதவக்கூடியதாக இருக்குமென்று சட்டமா அதிபர் கூறுகிறார்.
 
சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் மட்டுமன்றி மாகாணங்களில் உள்ள அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருடனும் சட்டமா அதிபர் திணைக்களம் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இந்த புதிய நடைமுறை பேருதவியாக அமையுமென்று சட்டமா அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசாங்கம் நாம் எங்கள் நாட்டின் உள்ளூர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முற்றாக நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்திருந்தது.
 
அந்த உறுதிமொழிக்கு அமைய அரசாங்கம் ஏற்கனவே இவ்வாணைக்குழுவின் பரிந்துரைகளில் பெரும் பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது. மனித உரிமை மீறல், யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பான சில பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டியி ருப்பதனால் அதற்கு சற்று காலதாமதமாகும் என்று முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதுபோன்ற பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு மாகாண மட்டத்தில் பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினரின் புலனா ய்வுகளை நெறியாக நடத்துவதற்கு உதவி செய்து குற்றம் இழைத்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இந்த மாகாண மட்டத்திலான சட்டமா அதிபரின் பிரிவுகள் உதவியாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனடிப்படையில் ஏற்கனவே பல புலன் விசாரணைகள் நிறைவு பெறும் கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாகாண சபைகளை எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகள் குறித்து அவை கொழும்பிலுள்ள சட்டமா அதிபர் திணைக் களத்துடன் தொடர்பு கொண்டு சட்டம் தொடர்பான வியாக் கியானங்களை பெறுவதற்கு இருக்கும் காலதாமதத்தை தடுக் கும் முகமாக மாகாண மட்டத்திலேயே இத்தகைய சட்ட உதவிகளை மாகாண நிர்வாகத்திற்கு பெற்றுக் கொடுப்ப தற்கும் இந்தத் திட்டம் உதவியாக அமையும்.
 
காணிப் பிரச்சினைகள், காணி உரிமை தொடர்புடைய சட்டப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் சட்டமா அதிபர் திணைக்களப் பிரிவுகள் மாகாண மட்டத்தில் உதவி செய்வதன் மூலம் காணி தொடர்புடைய வழக்குகள் பல வருடங்களாக நீதிமன்றங்களின் நிலுவையில் இருப்பதை தடுப்பதற்கும் உதவியாக அமை

No comments:

Post a Comment