Tuesday, April 29, 2014

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்பிக்கள் பதவியேற்பு!

 Tuesday, April 29, 2014
புது டெல்லி::டெல்லி மேல்சபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்பிக்கள் 4 பேர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
டெல்லி பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில் இருந்து புதிய எம்பிக்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் பிப்ரவரி மாதம் நடந்தது. 
இதில் அதிமுக சார்பில் எஸ். முத்துகருப்பன், கே. செல்வராஜ், சசிகலா, புஷ்பா, விஜிலா சத்யானந்த் ஆகியோரும், அதிமுக ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.கே. ரங்கராஜனும், திமுக சார்பில் திருச்சி சிவாவும் போட்டியின்றி பாராளுமன்ற மேல்சபை எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
இவர்களில் திருச்சி சிவா(திமுக), டி.கே. ரங்கராஜன்(மார்க். கம்யூ), ஆகியோர் எம்பிக்களாக பதவியேற்கும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. அதிமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அதிமுக எம்பிக்களும் நேற்று பதவியேற்க டெல்லி வந்திருந்தனர். மதியம் 12 மணிக்கு புதிய மேல்சபை எம்பிக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 4 பேரும் பதவியேற்றனர். அவர்களுக்கு துணை ஜனாதிபதியும், பாராளுமன்ற மேல்சபை சபாநாயகருமான ஹமீத் அன்சாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

No comments:

Post a Comment