Monday 28 April 2014
பாலசோர்:. எதிரி நாட்டு ஏவுகணையை மிக உயரத்தில் இடைமறித்துத்
தாக்கி அழிக்கவல்ல நவீன ரக இடைமறி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக
பரிசோதித்தது.
ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர்
தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வான் நோக்கி செலுத்தப்பட்ட பிரித்வி ஏர்
டிஃபென்ஸ்-IV இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக தனது இலக்கைத் தாக்கி அழித்தது.
கடற்படை விமானத்தில் இருந்து காலை 9.06 மணிக்கு எதிரி நாட்டு இலக்காக
கருதப்படும் ஏவுகணை ஏவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேடார் மூலம் கிடைத்த
சிக்னல்களைக் கொண்டு ஏவப்பட்ட வீலர் தீவில் இருந்து சென்ற நவீன ரக இடைமறி
ஏவுகணை, வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்தது.
இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக நடந்ததாக, ராணுவ ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.-வின் செய்தித் தொடர்பாளர் ரவி குமார்
குப்தா தெரிவித்தார்.
இதுவரை சோதிக்கப்பட்ட பிரித்வி ஏர் டிஃபென்ஸ் இடைமறி ஏவுகணைகள்
அதிகபட்சம் 50 கிலோமீட்டரில் இருந்து 80 கிலோமீட்டர் வரையிலான தூரத்தில்
உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடியதாகும். தற்போது சோதிக்கப்பட்டுள்ள
இடைமறி ஏவுகணையின் இலக்கு தூரம் 100 கிலோமீட்டருக்கு அதிகமானது என்று ராணுவ
வட்டாரங்கள் தெரிவித்தன.
.jpg)
No comments:
Post a Comment