Monday, April 28, 2014

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை: ஜி-7 முடிவு!!

Monday 28 April 2014
வாஷிங்டன்::உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை முயர்ச்சியாக அந்த நாட்டின் மீது குடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஜி-7 நாடுகள் தீர்மானித்துள்ளது.

இது குறித்து, ஜி-7 அமைப்பில் இடம் பெற்றுள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஆகியோரும் இணைந்து கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். 
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். உக்ரைனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலை அமைதியாக நடத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தலையீடு மேலும் அதிகரித்தால் பொருளாதாரத் கடையின் இலக்கையும் விரிவுப்படுத்தும் முனைப்புடன் உள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ஒபாமா மலேசியா சென்றடைந்தார். மலேசியாவுக்கு 48 ஆண்டுகளுக்கு பிறகு வரும் முதல் அமெரிக்க தலைவர் என்று பெருமையை ஒபாமா பெற்றுள்ளார். கடந்த 1966-ஆம் ஆண்டு அமெரிக்கத் தலைவர் லிண்டன் ஜான்சன் என்பவர் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு பிறகு மலேசியாவுக்கு வந்த முதல் அமெரிக்கத் தலைவர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆசிய நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக ஒபாமா அங்கு சுறறுப்பயணம் சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment