Monday, March 03, 2014
சென்னை::அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர்
ஜெயலலிதா தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். முதல் பிரசாரத்தை
காஞ்சிபுரத்தி லிருந்து ஆரம்பிக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.
போட்டியிடும் 40 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதல் அமைச்சர்
ஜெயலலிதா கடந்த 24_ந்தேதி வெளியிட்டார். கூட்டணியில் இடம்பெறும்
கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதும் அவர்களுக்கு
ஒதுக்கப்படும் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள்
என்றும் கூறினார். இன்னும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எந்த தொகுதி என்று
அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் முதல்_ அமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டபடி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று மதியம் 2ஙூ மணிக்கு காஞ்சிபுரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு நசரத்பேட்டையில் ஹெலிகாப்டரில் இறங்கி கார் மூலம், காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.
காஞ்சீபுரம் தொகுதி அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பேசுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் மாலை சென்னை திரும்புகிறார்.
முதல்_அமைச்சர் ஜெயலலிதா காஞ்சிபுரம் தேர்தல் பிரசாரத்துக்கு வருவதை யொட்டி அவரது ஹெலிகாப்டர் இறங்கும் நசரத்பேட்டையில் இருந்து காஞ்சிபுரம் பஸ் நிலையம் வரை வழிநெடுக கொடி தோரணங்கள் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. வாழை மர தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் மைத்ரேயன் எம்.பி. மேற்பார்வையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் தொகுதியில் முதன்முதலாக ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் தொடங்குவதால் தொகுதி முழுவதிலும் இருந்து பொதுக்கூட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (4_ந்தேதி) ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்_அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.
6_ந்தேதி நாகை, மயிலாடுதுறை தொகுதியிலும், 9_ந் தேதி நாகர்கோவில், 11_ந் தேதி சிதம்பரம், 13_ந் தேதி <ரோடு, திருப்பூர், 15_ந் தேதி கள்ளக்குறிச்சி, 18_ந் தேதி ராமநாதபுரம், 19_ந் தேதி திருச்சி, 21_ந் தேதி விருதுநகர், சிவகாசி, 23_ந் தேதி புதுச்சேரியிலும் பிரசாரம் செய்கிறார்.
25_ந் தேதி திண்டுக்கல், 28_ந் தேதி வேலூர், ஏப்ரல் 1_ந் தேதி தூத்துக்குடி, 2_ந் தேதி தேனி, 5_ந் தேதி தென்காசி தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பேசுகிறார்.

No comments:
Post a Comment