Monday, March 03, 2014
இந்த சந்தர்ப்பத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து நாம் வேதனைப்படுகிறோம். அரசாங்கம் வழங்கும் சகல சலுகைகளையும் முழுமையாக அனுபவித்து வரும் இவர்கள் ஜெனீவாவுக்கும் ஏனைய வெளிநாட்டு ஏகாதிபத்திய வாதிகளுக்கும் கோள் சொல்லி தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு காலடி வைத்த தங்கள் மூதாதையரின் வழியில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கையின் ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்காக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.
போர்த்துக் கேயருக்கு எதிரான பயங்கர யுத்தத்தின் போது முஸ்லிம்கள் மாயாதுன்னை மன்னனை ஆதரித்து போர்த்துக் கேயரை சீதாவக்க இராஜதானியில் இருந்து விரட்டியடித்த சம்பவம் முஸ்லிம்களின் தேசப்பற்றை எடுத்துக்காட்டுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பேரவையின் உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும் அவர் கண்டித்துள்ளார்.
அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வரின் இவ்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “அரூசியா தரீக்கா” என்ற மதத் தலைவருக்கு அராபிய மொழியில் உன்னத திறமைக்காக பெருமதிப்பிற்குரிய தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அப்ஸலுல் உலமா டாக்டர் தைக்கா சுஹைப் ஆலீம் பெறுமதிமிக்க கிரந்தத்தில் அரபிக், அர்வி மற்றும் பாரசீக மொழிகளின் செல்வாக்கு செரண்டிப் என்று அழைக்கப்படும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வலுப்பெற்றிருந்தது என்று கூறுகிறார்.
16ஆவது நூற்றாண்டில் முஸ்லிம் படைத் தளபதிகள் மாயாதுன்னை மன்னனுக்கு இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்து அவர்களை சீதாவாக்க இராஜதானியில் இருந்து விரட்டியடிக்க உதவி செய்தார்கள். இதனால், குஞ்சலி மரிக்கார், பிச்சை மரிக்கார் மற்றும் அலி இப்ராஹிம் ஆகிய மூன்று முஸ்லிம் படைத் தளபதிகளின் வீரச் செயல்கள் கெளரவிக்கப்பட்டன. இந்த மூன்று படைத் தளபதிகளும் ஹசரத் காதர் வலியின் நற்பணிகளைப் பார்த்து சாதனையைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.
இந்த தாக்குதலின் போது போர்த்துக்கேய படை படுதோல்வி அடைந்தது. இதனால் போர்த்துக்கேயரின் பல கப்பல்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இந்தப் படுதோல்வியினால் போர்த்துகேயர் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
இவ்விதம் முஸ்லிம்கள் இலங்கை அன்னைக்கு கடந்த காலத்தில் பெரும் பங்களிப்பை அளித்து நாட்டுப்பற்றை எடுத்துக்காட்டியுள்ளார்கள். கடந்த காலத்தில் போர்த்துக்கேய ஆக்கிரமிப் பாளர்களை விரட்டியடிப்பதற்காக முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் உடல் உறுப்புகளையும் தியாகம் செய்ததை இன்று மக்கள் சரியான முறையில் அங்கீகரித்துள்ளார்கள்.
அதனையடுத்து, சேர்.மொஹமட் மாக்கான் மார்க்கார் எபின்தி, பெருமதிப்பிற்குரிய தேசியத்தலைவர் டி.பி.ஜாயா, டாக்டர் எம்.சி.எம். கலீல், சேர்.ராஸிக் பரீத், கலாநிதி. பதியுதீன் மஹ்மூத், எச்.எஸ். இஸ்மாயீல், கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் ஆகிய முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சந்ததியினரின் நற்பணியை பறைசாற்றக்கூடிய வகையில் வீரத்துடன் நாட்டின் சுதந்திரத்தை அடைவதற்கு செய்த மகத்தான சேவையை எவரும் மறக்க முடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த செயல் வேட்டை நாயுடன் வேட்டையாடும் அதே வேளையில் முயலைக் காப்பாற்றுவதற்கு ஓடிச் செல்வதற்கு ஒப்பாகும். டொக்டர் ஜெய்க்கல் மற்றும் மிஸ்டர் ஹைட் என்ற இரு கதாபாத்திரங்களின் தொனிப்பொருளைப் போன்று முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொள்கிறது. இதனை சிங்களத்தின் டொன் நம் டொன், யுவான் நம் யுவான் என்ற சொற்பதத்துடன் ஒப்பிடலாம். ஒருவர் டொன்னாக இருக்கலாம். அல்லது யுவானாக இருக்கலாம். ஒருவருக்கு இந்த இரண்டு கதாபாத்திரங்களை செய்வது முடியாத காரியமாகும்.
தமிழ் குடிமக்களின் அழிவுக்கு வித்திட்டு சிறுவர் போராளிகள் தங்கள் கைவசம் இருந்து இராணுவ முகாம்களுக்கு ஓடிச் செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிய எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு உதவக்கூடிய அணுகுமுறையில் ஈடுபடுவதற்கு பதில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தை வேண்டுமென்றே தண்டிக்கும் அணுகுமுறையில் ஈடுபட்டு வருகின்றது.
முஸ்லிம்கள் எப்போதுமே தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உள்ளூரிலேயே தீர்த்துக் கொள்வதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் இதனால், முஸ்லிம்களை சிங்களப் பெரும்பான்மை இனத்தின் பெரும்பாலானோர் அவர்களை மனமுவந்து பாராட்டுகிறார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் அவதான முறையில் எல்.ரி.ரி.ஈ. எடுத்த அதே பாதையில் சென்று தங்கள் பிரச்சினைகளுக்கு உள்ளூரில் தீர்வு காண்பதற்கு பதில் அதனை சர்வதேச மயமாக்கும் பாதையை தவிர்த்துக் கொள்வது அவசியம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதற்கு ரி.பி.ஜாயா அவர்கள் ஆதரவளித்த போது எவ்வித முன் நிபந்தனையையும் விதிக்காமல் முஸ்லிம்கள் சகல சமூகங்களுடனும் ஒன்றிணைந்து வாழ வைக்கும் அதே வேளையில் தங்களுக்கு இருக்கும் முரண்பாடுகளை சகவாழ்வு எண்ணத்துடன் சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார்.
எல்.ரி.ரி.ஈ. இயக்கமும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் உள்ளூர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்திய காரணத்தினால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் புலம்பெயர்ந்தவர்கள் தமிழ் சமூகத்திற்குள்ளேயே பிளவுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், நீண்டகாலத்தில் அவர்களின் உதவியும் படிப்படியாக சீர்குலைந்துள்ளது என்பதை உணர வேண்டும்.
வடமாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை ஜெனீவாவில் விசாரணை செய்ய வேண்டுமென்று கேட்கும் போது அவர் ஒரு விடயத்தை மறந்துவிட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டியடிக் கப்பட்ட 72ஆயிரம் முஸ்லிம்கள் குறித்தும் காத்தான்குடியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றியும் அறந்தலாவ, கெப்பத்திகொல்லாவ ஆகிய இடங்களில் எல்.ரி.ரி.ஈ. கொலையாளிகள் மனிதப் படுகொலை புரிந்ததைப் பற்றியும் குறிப்பிட மறந்துவிட்டார் போலும். விக்னேஸ்வரன் மறந்துவிட்டாலும் நாம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் எல்.ரி.ரி.ஈ. விசாரணை செய்ய வேண்டுமென்று கேட்பது பொருத்தமாக இருக்கும்.
இலங்கை::முஸ்லிம்கள் சகல சமூகத்தினருடனும் தொடர்ந்தும் நட்புறவுடன் வாழ்ந்து வந்ததை நாம்
மறந்துவிடலாகாது. முஸ்லிம்கள் என்றுமே வன்முறையில் ஈடுபடவில்லை. பிரிவினை, தனிநாடு
என்ற எண்ணத்திற்கு அவர்கள் என்றுமே மனதில் இடமிருக்கவில்லை. இவ்விதம் என்றும்
இலங்கையின் ஒருமைப்பாட்டுக்காகவும், ஒற்றுமைக்காவும் வலுவாக செயற்பட்டார்கள்.

No comments:
Post a Comment