Monday, March 3, 2014

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் மண்டை ஓடுகள் மீட்பு!

Monday, March 03, 2014
இலங்கை::முல்லைத் தீவு மாவட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட 9 பேரின் மண்டை ஓடுகள் மீட்கப்பட்டன.  முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதி . இது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த்து. இங்குள்ள தோட்டத்தை தொழிலாளகள் சுத்தப்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது ஒரு மண்டை ஓடு வெளியே தேரிந்தது. எனவே, அந்த இடத்தைத் தோண்டி பார்த்தனர். அங்கு 9 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
 
பின்னர் அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அவர்கள் அணைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்களாம் என கருதப்படுகிறது. மேலும், விசாரணையும் நடைபெற்று வருகிறது. இது குறித்து இலங்கை ராணுவம் செய்தி தொடரபாளரிடம் கூறியதாவது:
இப்பகுதி ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டுல் இருந்தது. எனவே, இக்கொலையை ராணுவம் செய்யவில்லை. புலிகள் தான் செய்து மறைத்துள்ளனர். தங்களின் உத்தரவுக்கு கீழ்ப்படியாதவர்கள் மீது இது பொன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது என்றார்.
புலிகளின் கட்டுப்பாட்டுல் இருந்த மன்னார் மாவட்டத்தில் கட்டிட பணிகள் நடந்த போது அங்கு புதைக்கப்பட்ட 80 பேரின் எழும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment