Monday, March 03, 2014
சென்னை::இலங்கை சிறையில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிகோலுகின்ற மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் நமது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பாக். நீரிணைப் பகுதியில் கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெறும்போதெல்லாம் தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். அதன் காரணமாக சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக ஜ இலங்கை மீனவர்களிடையான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழக மீனவ பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் இந்திய ஜ இலங்கை மீனவர்களுக்கிடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை 27.1.2014 அன்று சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தைக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதாவால் எடுக்கப்பட்ட தொடர் முயற்சி மற்றும் வற்புறுத்துதலின் காரணமாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 295 தமிழக மீனவர்களும், புதுச்சேரி க்ஷ்னியன் பிரதேசத்தை சார்ந்த 22 மீனவர்களும் ஆக மொத்தம் 317 மீனவர்கள் இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
சென்னையில் 27.1.2014 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவ பிரதிநிதிகளும், புதுச்சேரியை சேர்ந்த 1 மீனவ பிரதிநிதியும், இலங்கையை சேர்ந்த 10 மீனவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் உயர் அதிகாரிகளும், மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் சார்பில் உயர்அதிகாரிகளும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமுகமான சழ்நிலையில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இலங்கை மீனவ பிரதிநிதிகள் தமிழக மீனவர்களை அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்ததை ஏற்று, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இலங்கை நாட்டில் நடத்தி, சுமுக முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை இலங்கையிலுள்ள கொழும்பு நகரில் 13.3.2014 நடத்தப்பட அனுமதி அளித்துள்ளார்கள். மேலும் 27.1.2014 க்கு பிறகு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 121 தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுககளையும் இப்பேச்சு வார்த்தைக்கு முன்பு விடுவிக்கப்படவேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்திள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிற்கிணங்க மேற்படி பேச்சு வார்த்தைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசின் வெளியுறவுத் துறை இணைச் செயலாளரை 2.3.2014 அன்று தேதியிட்ட கடிதம் வாயிலாக தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இக்கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 121 தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளும் 13.3.2014 அன்று கொழும்புவில் நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தைக்கு முன்பாக கண்டிப்பாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா 27.1.2014 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் விவாதிப்பதற்கு எடுத்துக் கொண்ட கீழ்க்கண்ட பொருள்நிரல்கள் (அகிடீடூக்ஷஹ) அடிப்படையிலேயே, 13.3.2014 அன்று பேச்சுவார்த்தை நடைபெறலாம் என உத்தரவிட்டுள்ளார்கள்.
(1) தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லையினை பாரபட்சமின்றி இருதரப்பு பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடித்திடும் பாரம்பரிய மீன்பிடி உரிமையை வலியுறுத்துதல்.
(2) முந்தைய இந்திய இலங்கை கலந்தாய்வின் போது ஒப்புக்கொள்ளப்பட்டவாறு, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுந்தாக்குதல்கள், சிறைபிடிப்பு மற்றும் நீண்டகால சிறைவாசம் மற்றும் இலங்கை அதிகாரிகளால் மீன்பிடிப்படகுகள் / உபகரணங்களை பறிமுதல் செய்தல் மற்றும் முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை கைவிடுதல்.
(3) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களை அவர்களது படகுகளுடன் விரைவாகவும், சுமூகமாகவும் நாடு திரும்புவதற்கான வழி வகைகள் குறித்து விவாதித்தல்.
(4) பாரம்பரிய கடல் பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உகந்த மீன்பிடி முறைகளை தெரிவித்தல்.
(5) முக்கிய தகவல்களான ஆபத்துக்கால நிகழ்வுகள், சுற்றுச்சூழலுக்குகந்த மீன்பிடிப்பு முறைகள் மற்றும் அதுதொடர்பான தகவல்களை இருதரப்பினரும் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாக் நீரிணைப்புப் பகுதியில் மீன் மற்றும் மீன்வளங்களை நீண்டகால வாழ்வாதாரத்திற்கு உகந்த வகையிலும், மீன்பிடிப்பினை சாத்தியமான தொழிலாக மேற்கொள்ளும் வகையிலும் சாத்தியக்கூறுகளை கண்டறிதல்.
மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு (ர.ட.இடுசுடுங் சச்.561/2008) தொடரப்பட்டு, தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்ட வழக்கிற்கு எவ்வித குந்தகமும் ஏற்படாத வகையில் தமிழக ஜ இலங்கை மீனவப் பிரதிநிதிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், பேச்சுவார்த்தையின் போது நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்குப் பின்னரே செயல்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கலந்து கொண்ட பின்வரும் 13 மீனவ பிரதிநிதிகளில், தமிழ்நாட்டின் சார்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கே. சிவடானம், ஜி. வீரமுத்து, எஸ். சித்திரவேலு மற்றும் எம். ஜெகநாதன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பி. இராஜமாணிக்கம், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த என். குட்டியாண்டி மற்றும் ஜி. இராமகிருழணன், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசுராஜா, அருளானந்தம், எம்.ஸ். அருள், எஸ்.பி. இராயப்பன் மற்றும் என். தேவதாஸ், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் சார்பாக எம். இளங்கோ ஆகியோர்கள் கலந்து கொள்வார்கள் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த பேச்சு வார்த்தையில் தமிழக அரசின் சார்பில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலர் மீன்வளத்துறை இயக்குநர், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்வார்கள் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி கொழும்பு நகரில் 13.3.2014 அன்று நடைபெறும் பேச்சு வார்த்தைக்கு முன்பு தற்பொழுது இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment