Saturday, March 29, 2014
இலங்கை::தமிழர்களைபடுகொலைசெய்தவர்களும் தமிழர்களை காட்டிக்கொடுத்தவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே உள்ளனர் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காந்திபுரம் பகுதியில் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று நடைபெற்றது.
வவுணதீவு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.
இதன்போது பாவற்கொடிச்சேனை,இருநூறுவில்,காந்திபுரம் உட்பட இப்பகுதியில் உள்ள மீள்குடியேற்றம் செய்யப்பட்ட எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
குறிப்பாக இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கிவரும் குடிநீர்ப்பிரச்சினை மற்றும் யானைகள் தாக்குதல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் யானைப்பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்தார்.
அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலம் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.இதன்மூலம் சுமார் 50இலட்சம் ரூபா செலவில் இப்பகுதியில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் இப்பகுதியில் வீதிகளின் அபிவிருத்திப்பணிகள் மற்றும் வீட்டுத்திட்டம் வழங்குவது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.
இதேபோன்று அப்பகுதியின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் தேவையான நடவடிக்கையினை எடுப்பதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment