Saturday, March 29, 2014

16 சிறுமிகளை கற்பழித்த சீனருக்கு மரண தண்டனை!

Saturday, March 29, 2014
பெய்ஜிங்::சீனாவின் ஆங்குய் மாகாணத்தை சேர்ந்தவர் வாங்யங். இவர் இண்டர்நெட் மூலம் 12 முதல் 16 வயது சிறுமிகளுடன் தொடர்பு வைத்து நண்பரானார்.

பின்னர், அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி ஓட்டலுக்கு அழைத்து சென்று கற்பழித்தார். இதுபோன்று 16 சிறுமிகளை கற்பழித்தார்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது வுகு நகர மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இவரது இந்த கற்பழிப்பு குற்றங்களுக்கு 16 வயது சிறுமி உடந்தையாக இருந்தாள். அவருக்கு ஏற்கனவே 3 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment