Saturday, March 29, 2014
இலங்கை::ஜெனிவாவில் நடைபெற்ற 25வது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கை மீதான தீர்மானம் தொடர்பில் இடம்பெற்ற ஓட்டெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றத்தை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக குறித்த தீர்மானத்தின் உரையில் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற அடிப்படையில், இந்தியா வாக்களிப்பில் இருந்து விலகியமைக்கு காரணம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ஃப்(Marie Harf) இது தொடர்பாக தெரிவிக்கையில், ஐ.நா.வில் இந்திய அதிகாரிகள் பேசிய விதம் தொடர்பில் பெரும் ஏமாற்றம் அடைந்து விட்டோம். வாக்களித்த விதமும் திருப்தியளிக்கவில்லை.
க
டந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு சாதகமாக வாக்களித்த போது, இம்முறை இந்தியா வாக்களிப்பிலிருந்து விலகியமை எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது என தெரிவித்துள்ளார்.
டந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு சாதகமாக வாக்களித்த போது, இம்முறை இந்தியா வாக்களிப்பிலிருந்து விலகியமை எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது என தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை மீதான தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும், 12 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்தன.
இலங்கைக்கு எதிராக குறித்த தீர்மானத்தின் உரையில் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற அடிப்படையில், இந்தியா வாக்களிப்பில் இருந்து விலகியமைக்கு காரணம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment