Saturday, March 29, 2014
இலங்கை::மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் இதுவரை தொடக்கம் 50 வீதம் வரையான வாக்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
பிற்பகல் 3 மணிவரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
காலி மாவட்டத்தில் 40 சதவீதமும், மாத்தறை மாவட்டத்தில் 40 சதவீதமும், களுத்துறை மாவட்டத்தில் 35 தொடக்கம் 40 சதவீதம் வரை வாக்குகள் பதிவளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 45 சதவீதமாக வாக்களிப்பும் பதிவாகியுள்ளன.
Update : Saturday, 29 March 2014 - 3:40
----------------------------------
வாக்களிப்புகள் சுமூகமாக நடைபெறுகின்றன
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தற்போது சமாதானமான முறையில் இடம்பெற்று வருவதாக, தேர்தல் இடம்பெறுகின்ற மாவட்டங்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளன.
155 மாகாண சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மேல் மற்றும் தென் மாகாணங்களில் 4 ஆயிரத்து 253 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெறுகின்றன.
இன்று முற்பகல் 10.30 வரையில் களுத்துறை மாவட்டத்தில் 18 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
கம்பஹா மாவட்டத்தில் 20 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக கம்பஹா மாவட்ட செயலாளர் ஜே.ஜே.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட செயலாளர் ரவிந்தர ஹேவாவித்தாரன வழங்கிய தகவலின் படி, காலி மாவட்டத்தில் 20 சதவீதமான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
இதேவேளை மாத்தறை மாவட்டத்தில் 25 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் இன்று முற்பகல் 10.30 வரையில் 25 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 17 சதவீதமான வாக்களிப்பு பதவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, 29 March 2014 - 8:23
----------------------------------------
தேர்தல்கள் ஆரம்பம்
மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல்கள்களின் வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
காலை 7 மணி ஆரம்பமான இந்த வாக்குப் பதிவுகள் மாலை 4 மணிவரையில் 4253 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும்.
இடம்பெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபை வாக்களிப்பிற்காக 29 லட்சத்து 8 ஆயிரத்து 418 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த இரண்டு மாகாணங்களிலும், 155 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 24 கட்சிகள் மற்றும் 42 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Saturday, 29 March 2014 - 9:12
----------------------
தேர்தலுக்கான நடவடிக்கைகள் பூர்த்தி
மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்குப்பெட்டி மற்றும் ஆவணங்கள் இன்று முற்பகல் விநியோகிக்கப்பட்டன.
இதுதவிர தேர்தல் அதிகாரிகள் அந்த அந்த வாக்குச் சாவடிகளை சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபை வாக்களிப்பிற்காக 29 லட்சத்து 8 ஆயிரத்து 418 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

நாலாயிரத்து 253 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.
இதற்காக 70 ஆயிரம் அரச அதிகாரிகளும் 37 ஆயிரம் காவல்துறையினரும், சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வாக்காளர்களை அச்சமின்றி தமது வாக்குகளை பதிவு செய்ய செல்லுமாறு தேர்தல்கள் ஆணையாளர் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment