Friday, March 28, 2014

இலங்கை குறித்த சர்வதேச சமூகத்தின் விமர்சனம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டது: ராஜீவ விஜேசிங்க!

Friday, March 28, 2014
இலங்கை::இலங்கை குறித்த சர்வதேச சமூகத்தின் விமர்சனங்கள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நியதிளுக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்hளர்.நாடுகள் அடிப்படையிலான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சர்வதேச அழுத்தங்கள் அதிகளவில் பிரயோகிக்கப்படுவதற்கு அரசாங்கத்தின் ஒரு சிலரின் நடவடிக்கைகளும் ஏதுவாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக சர்வதேச விவகாரத்திற்கு பொறுப்பான செயற்பட்டு வருவோர் உரிய முறையில் தங்களது கடமையை ஆற்றவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் முதன் முதலில் சுமத்தப்பட்ட போது அதற்கு உரிய பதிலளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் தமது ஆலோசனைகளக்கு செவிமடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment