Friday, March 28, 2014

உள்நாட்டு அரசியல் நிலைமைகளினால் இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை: இந்தியா!

Friday, March 28, 2014
சென்னை::உள்நாட்டு அரசியல் நிலைமைகளினால் இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் குறித்த வாக்கெடுப்பின் போது இந்தியா வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இறுதி நேரம் வரையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா அவ்வாறான ஓர் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இறுதி நேரத்தில் வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடத்தப்பட்ட போது, நல்லிணக்க முனைப்புக்களை கருத்திற் கொள்ளாத வகையிலும் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரிவித்து வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என இந்தியா அறிவித்திருந்தது. எனினும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளித்தால் அது இந்தியாவின் காஷ்மீர் விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் இவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இலங்கை தொடர்பான தீர்மானம் தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கும் என இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது. இதற்கு முன்னர் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment