Sunday, February 02, 2014
இலங்கை::தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க தூதுவர் மைக்கல் ஜே.சீசனும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க தூதுவர் மைக்கல் ஜே.சீசனும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 01 பெப்பிரவரி 2014 அன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் போருக்குப் பின்னராக வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி, நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வட மாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவனும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment