Saturday, February 1, 2014

இந்திய இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையை குழப்பும் நோக்கம் எமக்கு கிடையாது: கோசல வர்ணகுலசூரிய!

Saturday, February 01, 2014
இலங்கை::இலங்கை -இந்திய மீனவர்களுக்கிடையில் இணக்கம் காணப்பட்ட விடயங்களைக் குழப்பும் வகையில் கடற்படையினர் ஒருபோதும் செயற்படமாட்டார்கள் என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையில் காணப்பட்ட இணக்கத்தை குழப்பும் வகையில் இலங்கை கடற்படையினர் செயற்படுவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியிருந்தார். இது குறித்துக் கேட்டபோதே கடற்படைப் பேச்சாளர் மேற்படி கூறினார்.
இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களையும், கடலின் வளத்துக்குக் கேடு விளைவிப்பவர்களையும் தடுப்பதே கடற்படையின் முக்கிய பணி. அவ்வாறு நடந்து கொள்பவர்களையே கைது செய்வதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பொட்டம் ரோலிங் முறைமையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதில்லையென்றும், இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லையென்றும் பேச்சுவார்த்தையில் இணக்கம் கண்ட பின்னரும் மீண்டும் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்ததும் அல்லாமல், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களே இணக்கப்பாட்டை குழம்பும் வகையில் செயற்பட்டுள்ளனரே தவிர கடற்படை குழப்பும் வகையில் செயற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய.
 
 

No comments:

Post a Comment