Saturday, February 01, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குறித்து
குற்றச்சாட்டை கொண்டு வர முயற்சிக்கும் நாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட
விடயங்களை அடிப்படையாக கொண்டு அவ்வாறான முயற்சியில் ஈடுபடவில்லை என
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் புலிகளின்
பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் போரில் ஈடுபட்டிருந்த போது செயற்படுத்திய
நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே இது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை
ஆணைக்குழுவில் கூட்டத் தொடரில் அந்நாடுகள் எந்த வகையான யோனையை
முன்வைத்தாலும் அது பயங்கரவாத்திற்கு உதவியளிப்பதாகும்.
போர் நடைபெற்ற போது சில சர்வதேச நாடுகள் அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு
ஏற்ப செயற்படும் கைப்பாவைகளாக இலங்கை அரசை மாற்ற முயற்சித்தனர்.
அவர்களின் கைப்பாவைகளாக மாறி, அந்த நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தாத
காரணத்தினால் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயற்சித்து
வருகின்றனர்.
பயங்கரவாதத்தை தோற்கடித்தன் காரணமாகவே சர்வதேச நாடுகள் யோசனைகளை கொண்டு வருகின்றன.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்படாதிருந்தால், அந்நாடுகள் இலங்கைக்கு
அமைதிப்படையை அனுப்பியிருக்கும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment