Wednesday, February 26, 2014
இலங்கை::இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டடுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி ஆலோசகரும் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால சிறி புத்தரகித மகாநாயக்க தேரர் யாழில் உறுதியளித்துள்ளார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன்,
ஜனாதிபதி ஆலோசகரும் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால
சிறி புத்தரகித மகாநாயக்க தேரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றுகாலை வருகைதந்ந ஜனாதிபதி ஆலோசகரு பௌத்த
விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க
தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகள், யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி
மேஜர் ஜென்ரல் உதயப்பெரேரா ஆகியோர் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ
சோமசுந்தரப்பரமாச்சாரிய ஞானதேசிக சம்பந்த சுவாமிகள் மற்றும் கலாநிதி
ஆறுதிருமுருகன் ஆகியோரை நல்லை ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச்சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேரருடனான சந்திப்பை அரசியலாக்க வேண்டாம் என்றும் அரசியல்
விவகாரங்களை பின்னர் ஒருமுறை பேசலாம என்றும் யாழ். மாவட்ட
இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் உதயப்பெரேரா கேடடுக்கொண்டார்.
இருப்பினும் அவரது வேண்டுகோள் புறம்தள்ளபட்டு நீண்டநேரமாக தமிழ் அரசியல்
கைதிகளின் விவகாரம் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment