Wednesday, February 26, 2014இலங்கை::இலங்கையில் மீண்டும் பிரிவினைவாதத்தை,
ஆயுத பயங்கரவாதத்தை உயிர்ப்பிப்பதில் பின்னிற்கப்போவதில்லையென்ற
செய்தியை ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவித்ததன் மூலம் தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ளார் என தேசப்பற்றுள்ள
தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்த பண்டார
தெரிவித்தார்.
ஜெனீவாவில் இலங்கைக்கெதிரான நிலைப்பாட்டையே இந்தியா மேற்கொள்ளும்
என்றும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய
இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும்
தெரிவிக்கையில்; இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையல் மத்தியில் ஆட்சியமைப்பதற்கு தமிழ் நாட்டு அரசியல்
ஆதரவு அதிக தாக்கத்தை செலுத்துகின்றது. இதனைப் பயன்படுத்தி தமிழ்
நாட்டு அரசியல் சக்திகள் தமது பேரம் பேசும் வேலையை
ஆரம்பித்துவிட்டது.
அத்தோடு தமிழ் நாட்டு மக்களினதும் புலி ஆதரவாளர்களினதும்
வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவே ராஜீவை கொலை செய்த கொலையாளிகளை
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா விடுதலை செய்துள்ளார்.இது மத்தியில்
ஆட்சியிலுள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் நெருக்கடிகளை
தோற்றுவித்துள்ளது.
அத்தோடு ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம்
அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென்றும் அதனூடாக மறைமுகமான
அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது ஜெயலலிதாவின் விடுதலைக்கான அறிவிப்பானது இலங்கைக்கும் ஆபத்தான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுதான்
இந்தியாவின் விசேடமாக தமிழ்நாட்டின் தேவைகளை இலங்கை அரசாங்கம்
நிறைவேற்றாவிட்டால் மீண்டும் இலங்கையில் ஆயுதமேந்திய பிரிவினைவாத
பயங்கரவாதத்தை உயிர்ப்பிக்கவும் பின்னிற்கமாட்டோம் என்ற ஆபத்து
சமிக்ஞைவிடுவிக்கப்பட்டுள்ளது.ராஜீவை கொலை செய்த 7 பேர் விடுதலை
செய்யப்பட்டதால் பிரபாகரன் நிரபராதி ஆகிவிடமாட்டார்.
ஏனென்றால் இந்திய உச்ச நீதிமன்றம் பிரபாகரனை கொலைக்குற்றவாளியாக
தீர்ப்பளித்துள்ளது.அத்தோடு தற்போது விடுதலை செய்யப்படவுள்ள 7
குற்றவாளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறதே தவிர
குற்றங்களிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்படவில்லை
என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
No comments:
Post a Comment