Tuesday, February 4, 2014

யாழில் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்!

Tuesday, February 04, 2014
இலங்கை::காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்
யாழ் . மாவட்டத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் . மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார் .
 
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
 
காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச் . டபிள்யூ குணதாசாவினால் யாழ் . மாவட்டத்தில் இந்த விசாரணைகள் எதிர்வரும் 14,15,16,17 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது .
 
யாழ் . மாவட்டத்தில் காணாமற்போனோரின் விபரங்கள் கிராம அலுவர் பிரிவுகளாகச் சேகரிக்கப்பட்டு பிரதேச செயலகங்களினூடாக காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தன . அதனடிப்படையில் கிராமஅலுவலர் பிரிவுகள் ரீதியாக காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன .
 
அந்த வகையில் 14 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்திலும் 15 ஆம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ் . மாவட்டச் செயலகத்திலும் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர் .
 
யாழில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கையின் ஆரம்பக் கலந்துரையாடல் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார் .

No comments:

Post a Comment