Tuesday, February 04, 2014
சென்னை::தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய
முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை கடுமையாக சாடினார். குறிப்பாக தமிழக
சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய
அரசு புறக்கணித்து வருவதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். வரும்
நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது நமது நாட்டின்
வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் கூறினார்.
தமிழக சட்டசபையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:
அடுத்து மீனவப் பிரச்சனையை பற்றி இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழக மீனவர்களின் தற்போதைய பிரச்சனைக்கு மூல காரணமாக விளங்குவது கச்சத் தீவு. இந்திய நாட்டிற்கு சொந்தமான இந்த கச்சத் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, 1974 ஆம் ஆண்டு இந்திய _ இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் மத்திய அரசால் இலங்கை நாட்டிற்கு தாரைவார்க்கப்பட்டது.
கச்சத் தீவு இலங்கை நாட்டிற்கு தாரைவார்க்கப்படுவதற்கு முன்பே, அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதியுடன் மத்திய அரசு இரண்டு முறை ஆலோசனை செய்திருக்கிறது. மத்திய அரசிடம் இது போன்றதொரு எண்ணம் இருப்பதை அறிந்த கருணாநிதி, இது குறித்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி, மக்களின் கவனத்தை <ர்த்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை.
1960 ஆம் ஆண்டிற்கு முன்பு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெருபாரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானுக்கு அளிக்க மத்திய அரசு முயன்ற போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மத்திய அரசின் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதனைப் பின்பற்றி, கச்சத் தீவினை தாரைவார்க்கும் மத்திய அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கலாம். ஆனால் திரு கருணாநிதி, அதையும் செய்யவில்லை. கச்சத் தீவை திருமதி இந்திரா காந்தி அவர்கள் இலங்கைக்குக் கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ஜன சங்கத் தலைவர். வாஞுபாய் அவர்கள் அப்போது அறிவித்தார். இதைச் சுட்டிக் காட்டி, 29.6.1974 அன்று செய்தியாளர்கள் திரு. கருணாநிதியிடம் கேள்வி கேட்ட போது, +அது பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை$ என்று பதில் அளித்துள்ளார். அதாவது, 1974 ஆம் ஆண்டு கச்சத் தீவினை மத்திய அரசு இலங்கை நாட்டிற்கு தாரை வார்க்க
முயற்சி செய்த போது, அதை முன்கூட்டியே அறிந்த கருணாநிதி, அதற்கு மிகப் பெரிய எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை; மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசுக்கு எதிராக மிகப் பெரிய, போராட்டங்களையும் நடத்தவில்லை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கையும் தொடுக்கவில்லை, இன்னும் சொல்லப் போனால், திரு. வாஞுபாய் அவர்களின் கருத்திற்கு ஆதரவாகக் கூட தனது கருத்தை தெரிவிக்கவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அடக்கமாக, சாத்வீக முறையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தவிர வேறு எதையும் கருணாநிதி செய்யவில்லை.
தமிழக மீனவர்களின் உயிர்நாடியாக விளங்கும் கச்சத் தீவு பிரச்சனைக்கு நான் 1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு தீர்வுகளை முன்மொழிந்து உள்ளேன். இவை எதையும் மத்திய அரசு நிறைவேற்றிடாத சழ்நிலையில், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
பொதுச் செயலாளர் என்ற முறையில் பெருபாரி வழக்கினை மேற்கோள் காட்டி
2008 ஆம் ஆண்டு நான் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கினைத் தொடுத்தேன். உச்ச நீதிமன்றத்தில் என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், +1974 மற்றும் 1976 ஆம் ஆண்டைய இந்திய _ இலங்கை ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல$ என்று உத்தரவிட வேண்டுமென்றும் கோரியிருந்தேன். இந்த வழக்கில் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன். ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதி தமிழகத்திற்கு சாதகமான எவ்வித மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. மாறாக, மைத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்த பிறகு மாநில அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட வேண்டிய எதிர் உறுதி ஆவணம் பற்றி முடிவு செய்யலாம்$ என்று முடிவு செய்தவர்
திரு. கருணாநிதி.
தி.மு.க. ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசோ, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இந்திய _ இலங்கை நாடுகளுக்கு இடையேயான கச்சத் தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியதில்லை என்றும், கச்சத் தீவு இந்திய நாட்டின் ஒரு பகுதியே இல்லை என்றும் தெரிவித்து, என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது.
இந்தச் சழ்நிலையில், 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நபர் ஒருவரால் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கில், பதில் மனுவை தாக்கல் செய்த மத்திய அரசு, +1974 மற்றும் 1976 ஆம் ஆண்டைய ஒப்பந்தங்களின்படி, இந்திய கடல் எல்லைக்குள் தான் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும்; கடல் எல்லையை தாண்டிச் சென்று அண்டை நாட்டின் வளத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது$ என்று தெரிவித்துள்ளது. மேலும் 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களின்படி, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கான எந்த உரிமையும் இந்திய மீனவர்களுக்கு இல்லை என்றும் மத்திய அரசு, தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில், இந்திய _ இலங்கை நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லை மற்றும் கச்சத்தீவு மீதான உரிமை ஆகியவை ஏற்கெனவே முடிந்துவிட்ட ஒன்று என்றும் மத்திய அரசால் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழர்களுக்கு விரோதமான இந்த மத்திய அரசுக்குத் தான் திரு. கருணாநிதி ஆதரவு அளித்தார், அளிக்கிறார், அளிப்பார்.
இப்படிப்பட்ட கருணாநிதி, மிக சமீபத்தில் கச்சத் தீவு குறித்து
உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துவிட்டு, அதைப் பற்றி பெருமைபட்டுக் கொள்வது நகைப்புக்குரியதாக உள்ளது. திரு. கருணாநிதியின் இந்தச் செயல் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதற்கு சமம்.
நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, என்னால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இணைத்துக் கொள்ளும் வகையிலான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றினேன். இதன் அடிப்படையில் தமிழக அரசின் வருவாய் துறை கச்சத் தீவு வழக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதற்கும், தாக்கப்படுவதற்கும், சிறைபிடிக்கப்படுவதற்கும் கச்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது தான் காரணம். கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 1,131 தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இருப்பினும் எனது தொடர் முயற்சியின் காரணமாகவும், தூதரக நடவடிக்கைகள் காரணமாகவும் அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் மீனவச் சங்கப் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையினை ஏற்று இரு நாடுகளின் மீனவச் சங்க பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஏற்பாடு செய்தேன். இந்தப் பேச்சுவார்த்தை ஒரு சுமுகமான சூழ்நிலையில் நடைபெற ஏதுவாக, பேச்சுவார்த்தைக்கு முன்பே இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, தமிழக சிறைச்சாலைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில், கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 295 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடைமைகளும் திருப்பித் தரப்பட்டுள்ளன. இதே போன்று தமிழக சிறைச்சாலைகளில் இருந்த இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சுமுகமான சழ்நிலையில், 27.1.2014 அன்று தமிழக _ இலங்கை நாட்டு மீனவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில், இரட்டை மடி, மற்றும் சுருக்கு மடி, மூலம் மீன்பிடிப்பது இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும், உலக அளவில் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டு உள்ளதால் இதனை முழுமையாக செயல்படுத்துவது என்றும், இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழக மீனவர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை வட மாகாணத்தைச் சார்ந்த மீனவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் நம்பிக்கையினை பெறுவதற்காகவும், மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு மேலும் முன்னேற்றத்தை அளிக்கும் நல்லெண்ண நோக்கத்துடன் 2014 பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு இழுவை படகுகள், இலங்கை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கை கடற் பகுதியில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைக்க இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். தமிழக _ இலங்கை மீனவர்களிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை நல்ல முறையில் முன்னெடுத்து செல்ல இந்த கோரிக்கையை தமிழக மீனவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இலங்கை நாட்டின் கரையோர பகுதிகளில் இழுவலை படகுகள் மீன்பிடிப்பில் <டுபடுவதால், இலங்கை மீனவர்களின் வலைகள் சேதம் அடைவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட ஒரு மாத கால தடை நடைமுறைக்கு வரும் வரை, இலங்கை நாட்டின் கரையோர பகுதிகளில் இழுவலை படகுகள் மீன்பிடிப்பில் <டுபடக் கூடாது என்பது இருநாட்டு மீனவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்காக இலங்கை நாட்டிற்கு வரும்படி தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவப் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்ததை ஏற்று, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இலங்கை நாட்டில் நடத்தி சுமுக முடிவுகள் எடுக்கப்படும்.
இலங்கை மற்றும் இந்திய நாட்டில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக பரஸ்பரம் விடுதலை செய்ய வேண்டும் என இரு நாட்டு அரசுகளையும் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும்
ஒரு மனதாக கேட்டுக் கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையினால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது என்பதை இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை சிறைபிடித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொறுத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில் சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும்; இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், தமிழ் <ழம் குறித்து இலங்கையில் உள்ள மற்றும் வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை நாட்டில் நடைபெறும் அனைத்துக் கூட்டங்களையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும்; இலங்கை வீரர்கள் எவருக்கும் ராணுவப் பயிற்சியை இந்தியாவில் அளிக்கக் கூடாது; இலங்கை நாட்டுடனான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்பனவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இது குறித்து பல்வேறு கால கட்டங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. எந்த ஒரு தீர்மானத்தின் மீதும் மத்திய அரசு இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு அப்போது ஆதரவு அளித்த தி.மு.க.வும் வாய் மூடி மவுனியாகத்தான் இருந்தது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும், மத்திய அரசு வெளியுறவுத் துறை அமைச்சரை அந்த மாநாட்டிற்கு அனுப்புவதில் உறுதியாக உள்ளது என்பதை அறிந்து; கடைசி முயற்சியாக, மாநாடு கூடுவதற்கு இரு நாட்கள் முன்பு இந்த மாமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பாக எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தினை நிறைவேற்றினோம். இந்தத் தீர்மானத்தினை, தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டார். மத்திய அரசின் இந்தச் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக நான்கு நாடுகள் தீர்மானம் கொண்டு வரப்போவதாக செய்திகள் வந்துள்ளன. எங்களைப் பொறுத்த வரையில், இந்தியாவே, இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை தண்டிக்க தனித் தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்து அதற்கு ஆதரவாக மற்ற நாடுகளை வாக்களிக்க வைத்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இதனை நிச்சயம் நிறைவேற்றாது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அப்போது ஆட்சி மாறும். காட்சிகளும் மாறும். மத்திய அரசின் கொள்கைகளை தீர்மானிக்கக் கூடிய நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும். அப்போது, ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அதனை வெற்றி பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

No comments:
Post a Comment