Saturday, February 1, 2014

ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தூக்கு தண்டனைக்கு ஏற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்!

Saturday, February 01, 2014
புதுடில்லி::முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை, 'இவர்கள் மூவரும் தூக்கு தண்டனைக்கு ஏற்றவர்கள் தான்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று தெரிவித்தது.

ராஜிவ் படுகொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, இந்த மூவரும், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி, தங்களின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரியிருந்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆனதால், தங்களின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க உத்தரவிட வேண்டும் என, மூவரும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதற்கு முன் உதாரணமாக, மற்றொரு வழக்கில், கருணை மனு மீது, நடவடிக்கை எடுக்க, காலதாமதம் ஆனதால், தூக்கு தண்டனை கைதிகள் சிலரின், தண்டனை, ஆயுளாக குறைக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டினர். அது போல், தங்களின் தண்டனையையும் குறைக்க வேண்டும் என, ராஜிவ் கொலையாளிகள், சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தினர். அவர்கள் சார்பில் ஆஜரான, பிரபல வழக்கறிஞர், ராம்ஜெத்மலானி இதை நேற்று வலியுறுத்திய போது,

குறுக்கிட்ட, தலைமை நீதிபதி, சதாசிவம் தலைமை யிலான நீதிபதிகள், 'கால தாமதத்தை ஏன் பார்க்கிறீர்கள்? அவர்கள் செய்த குற்றத்தின் தன்மையை பாருங்கள்' என்றனர். மேலும், 'இவர்கள் மூவரும், தூக்கு தண்டனைக்கு ஏற்றவர்கள் தான்' எனவும், கோர்ட் கூறியது. இந்த வழக்கில், கருணை மனு தாமதம் குறித்த, மத்திய அரசின் பதில் மனு, பிப்ரவரி, 4ல் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்குப் பிறகு தான், இறுதி முடிவு கிடைக்கும்.

No comments:

Post a Comment