Saturday, February 01, 2014
இலங்கை::மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியின்
அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன .
இந்த மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு அளவீடு
செய்யப்பட்டிருந்த மண்டையோடுகளையும் எச்சங்களையும் வெளியில் அகற்றி
பெட்டிகளில் அடைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன
.
இதன் பிரகாரம் 19 ஆவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட பணிகளின்போது 5
மனித எலும்புக்கூடுகள் வெளியில் அகற்றப்பட்டு பாதுகாப்பாக பெட்டிகளில்
அடைக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார் .
பெட்டிகளில் அடைக்கும் பணிகள் இன்று நிறைவடைந்த பின்னர் புதைகுழியின்
அகழ்வுப் பணிகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும் பெப்ரவரி
மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்
இதுவரை மொத்தமாக 28 எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு
மன்னார் வைத்தியசாலையின் பிரத்தியேக அறையொன்றில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளன .
இதேவேளை இந்த மனித புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தமாக 53 மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுரம்
விசேட சட்டவைத்திய அதிகாரி எல்.டி. வைத்தியரத்னவின் மேற்பார்வையின் கீழ்
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன .
மன்னார் - மாந்தை வீதியின் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு அருகில்
கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி நீர்குழாய்களை பொருத்தும் பணிகளில்
ஈடுபட்டிருந்தவர்களால் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும் .
No comments:
Post a Comment