Tuesday ,25, February. 2014
திருப்பூர்::தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைப்பதில் ரூ.2 கோடி மோசடி செய்த முன்னாள் மேலாளர் உள்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வைக்கும் பொறுப்பு டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் கிளை நிறுவனம் திருப்பூர் ஒடக்காடு பகுதியில் செயல்படுகிறது. இந்நிறுவன மேலாளர் பரதன், சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் கிளையில் ஆடிட்டிங் செய்தார். இதில், தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 200ஐ கணக்கில் வராமல் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.இதுகுறித்த விசாரணையில்,
கோவையை சேர்ந்த இந்நிறுவன முன்னாள் மேலாளர் சுரேஷ்குமார் (33), அங்கேரிபாளையம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த விஷ்ணு வியாஸ் (26),
அவிநாசி குளத்துப்பாளையம் பரமசிவம் (29), பிச்சம்பாளையம்புதூர் பிரபு (26) ஆகிய 4 பேரும் 3 ஆண்டாக தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் குறைவான பணத்தை லோடிங் செய்து மோசடி செய்தது தெரிந்தது.
இதையடுத்து மேலாளர் பரதன் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான லோடிங்மேன் ராஜசேகர், மணிகண்டன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment