Tuesday, February 25, 2014

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப கூடாது ரஷ்ய அதிபர் புடினுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Tuesday ,25, February. 2014
கீவ்::உக்ரைன் நாட்டில் நாளைக்குள் புதிய அரசை அமைக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அதிபர் விக்டர் யனுகோவிச்சை பிடிக்க எதிர்க்கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றம் நீடிக்கிறது.சோவியத் யூனியனில் இருந்து கடந்த 1991ம் ஆண்டு உக்ரைன் தனி நாடானது. தற்போது அதிபராக விக்டர் யனுகோவிச் இருந்தார். இவர் ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவர். நாட்டில் பொருளாதார சீர்குலைவுக்கு விக்டர் வழிவகுத்து விட்டார்.
 
ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று கூறி எதிர்க்கட்சியினர் கடந்த 3 மாதங்களாக பெரும் பேராட்டம் நடத்தினர். விக்டர் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் நடந்த மோதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்கள் நாட்டை ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அதேபோல் மேற்கு பகுதியில் உக்ரைன் மொழி பேசும் மண்ணின் மைந்தர்கள், உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வன்முறைகளில் ஈடுபட்டனர்.நெருக்கடி முற்றவே அதிபர் விக்டர் தலைமறைவாகி விட்டார். அவர் கிழக்கு பகுதியில் ஒளிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சியினர் தலைநகர் கீவ் உள்பட முக்கிய நகரங்களை பிடித்துள்ளனர். மேலும், அதிபர் விக்டர் தங்கியிருந்த ஆடம்பர மாளிகை அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய அரசை அமைக்க அவர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
செவ்வாய்க்கிழமைக்குள் புதிய அரசை அமைக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளனர். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கும் ஜி20 மாநாட்டில், உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது உக்ரைனின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவதாக அமெரிக்கா மற்றும் சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) ஆகியவை முன்வந்தன. ஆனால், உக்ரைனில் தலைமறைவாக உள்ள அதிபர் விக்டருக்கு ஆதரவாக தனது படை களை அனுப்ப ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டுள்ளார். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. படைகளை அனுப்பினால் அமெரிக்கா தலையிட வேண்டியிருக்கும் என்று புடினை எச்சரித்துள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து தற்காலிகமாக அதிபர் பொறுப்பில் உள்ள அலெக்சாண்டர் டர்சினோவ் கூறுகையில், அண்டை நாடு என்ற முறையில் ரஷ்யாவுடன் சுமுக உறவு வைத்து கொள்ளவே விரும்புகிறோம். இருதரப்புக்கும் சம உரிமை என்ற அடிப்படையில் நட்பு ஏற்பட வேண்டும் என்றார். இந்த பரபரப்பான
 
சூழ்நிலையில், அதிபர் விக்டரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் யூலியா டிமோஷென்கோ சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார்.வரும் மே 25ம் தேதி நடக்கும் பொது தேர்தலுக்கு முன்பு நாளை அவர் பிரதமர் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்காலிக பிரதமராக யார் பொறுப்பேற்றாலும், நாட்டில் சீர்குலைந்த பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் அவருக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்

No comments:

Post a Comment